மதுரங்குளி school of excellence இல் ‘Excel media club’ அங்குரார்ப்பணம்!

Date:

புத்தளம் மதுரங்குளியில் உள்ள School of excellence சர்வதேச பாடசாலையில் “எக்ஸெல் ஊடகக் கழகம்” (Excel media club) ஒன்று கடந்த புதன்கிழமை (15) அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இஸ்தான்புல் இப்னு கல்தூன் பல்கலைக்கழகத்தின் ஊடக மைய உதவி நிபுணர் மற்றும் அதே பல்கைலைக்கழகத்தின் முதுமானித்துறை மாணவர் ஏ. எம். அப்துல் ரஹ்மான் மற்றும் துருக்கி ஸகாரியா சமூக ஊடகங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிபுணர் ஏ.எம். அப்துல்லாஹ் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த ஊடக கழகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

ஊடகக் கழகத்தை திறந்து வைத்த பின்னர், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குத் தேவையான விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் இருவரும் இணைந்து வழங்கினர்.

இந்த நிகழ்வுக்கு excellence சர்வதேச பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பஹன மீடியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். அப்துல் முஜீப் கலந்து கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளால் அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறான ஊடகக் கழகங்களை நிறுவுவதன் மூலம், பாடசாலை பருவத்திலிருந்தே ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்தவும், சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தவும் மாணவர்களை வழிநடாத்தி , சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப சாத்தியமான பங்களிப்புக்களை வழங்க முடியும் என்பது இன்றைய சூழலில் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும்.

Popular

More like this
Related

600,000 மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருகின்றார்கள்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருவதாக பாட்டலி...

சடுதியாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்: சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த...

பெரும்பாலான பகுதிகளில் மழை

இலங்கையைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக...

இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு...