கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் தொடராக நடத்தி வருகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 9A சித்தி பெற்ற மாணவர்களுக்கான 11ஆவது கௌரவிப்பு விழா இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் பிராதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முன்வர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹாஜி பாய்ஸ் முஸ்தபா அவர்களும் கௌரவ அதிதியாக டொக்டர் ஷாபி சிஹாப்தீன் உள்ளிட்ட பெருந்திரளான கல்விமான்கள் புத்திஜீவிகள், கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையினூடாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. சிறப்பான இந்த நிகழ்வுக்கு ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.