முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய அரச அலுவலகங்களில் திங்கட்கிழமை பொது மக்களுக்கு சேவை வழங்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தோறும் திணைக்களத்திற்கு வருகைத்தரும் மக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.