சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.