பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் சிலர் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.