வாக்களிப்பின் போது பிரஜைகளின் பொறுப்புக்களை புரிந்துகொள்ளல்: புத்தளத்தில் விசேட கருத்தரங்கு!

Date:

‘வாக்களிப்பின் போது பிரஜைகளின் பொறுப்புக்களை புரிந்துகொள்வோம்’ என்ற தலைப்பின் கீழ் நேற்று(26) புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள சர்வமத அமைப்பின் கேட்போர் கூடத்தில் விசேட கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் பெப்ரல் அமைப்பின் புத்தளம் மாவட்ட இணைப்பதிகாரி ருமேஷ் அவர்கள் இந்த கருத்தரங்கை வழிநடத்தினார்.

காலத்திற்கு தேவையான ஒரு தலைப்பு என்ற வகையில் இந்த தலைப்பு மிகப்பரந்தளவிலான விளக்கத்தை கொண்டதாக அமைந்திருந்தது.

இந்த கால சூழ்நிலையில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு தங்களது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்த வேண்டும்? தனக்குரிய ஜனநாயக உரிமை என்ன?, ஜனநாயக ரீதியில் தேர்தலில் எவ்வாறு பங்களிப்பு செய்ய வேண்டும்? ஜனநாயக ரீதியில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை எவ்வாறு கேள்விக்குட்படுத்துவது? அதற்கான வழிமுறைகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டன.

அதேநேரம், இக்கருத்தரங்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தரங்காகவும் அமைந்திருந்தது.

இத்துறையில் நீண்ட ஈடுபாடு கொண்ட ஒருவர் என்ற வகையில் ருமேஸ் அவர்கள் இக்கருத்தரங்கை மிக அழகாக வழங்கியிருந்தார்.

இந்த கருத்தரங்கில் கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழு நாட்டு மக்களுக்கும் சென்றடையவேண்டும் என கலந்துகொண்டவர்கள் அனைவருடைய எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது.

இதேவேளை இக்கருத்தரங்கை புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் முன்னெடுக்கப்பதற்காக புத்தளம் DIRC எடுப்பதற்காக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இக்கருத்தரங்கில் புத்தளம் DIRC செயற்குழு உறுப்பினர்களும் அதனுடைய பிரதேச பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

Popular

More like this
Related

YMMA இன் மனித நேயப் பணி வெல்லம்பிட்டியில்..!

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல்...

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துங்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள...

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என சபாநாயகர்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...