வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர்: கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

Date:

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.

இதேவேளை உலக வர்த்தக மைய கட்டடப் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகப் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து வீதியை மறித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...