13வது திருத்தம் தொடர்பாக ஆராய மகாநாயக்க தேரர்கள் யாழ்ப்பாணம் விஜயம்!

Date:

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் , 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் வடக்கு கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும், அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள் சமூகமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதற்காக குறித்த விஜயம் அமைந்துள்ளதாகவும்.

இதேவேளை குழுவினர், யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதோடு மத தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வ மத குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...