ஓமான், மஸ்கட்டில் சர்வதேச புத்தகக் காட்சி நேற்று (22) தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் (04) வரை Oman convention and exhibition centreல் நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று உள்துறை அமைச்சர் சையத் ஹமூத் பைசல் அல் புசைதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 32 நாடுகளைச் சேர்ந்த 826 பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன.
அதேநேரம் 260,614 அறபு மொழியிலான நூல்களும் 204,411 பிற மொழியிலான வெளிநாட்டு நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 165 கலாசார நிகழ்ச்சிகளும் 166 சிறுவர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாசிப்பு அருகிவரும் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டத்தக்கது.
அதிலும் குறிப்பாக அரபு நாடு ஒன்றில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவதானது வாசிப்புக்கு அந்த சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.