3 ஆவது T20 தொடரில் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Date:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 234 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ஓட்டங்களை விளாசினார். இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி, தலைவர் ஹர்த்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 33, 30 மற்றும் 24 ஓட்டங்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 235 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஃபின் எலென், தேவன் கென்வே தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன், கிலென் பிலிப்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி துவக்கத்திலேயே விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் காரணமாக வெற்றி இலக்கை துரத்த முடியாமலும், விக்கெட் சரிவை நிறுத்த முடியாமலும் நியூசிலாந்து அணி போராடியது. நியூசிலாந்து வீரர்கள் துவக்கத்திலேயே விக்கெட்களை இழக்க, அந்த அணியின் டேரில் மிட்செல் மட்டும் நிதானமாக விளையாடி வந்தார். 12.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மூன்றாவது டி20 போட்டியில் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தியா சார்பில் தலைவர் ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...