3 ஆவது T20 தொடர்: நியூசிலாந்து – இந்தியா இன்று மோதல்!

Date:

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...