மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

Date:

நாட்டில் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அக்காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால், அது அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்காக நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீரை இனி வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முதல் தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

அத்துடன் உயர்தரப் பரீட்சையின் போது ஏற்படும் மின்வெட்டுகளை தடுக்க உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

Popular

More like this
Related

2026 மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக...

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...