55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானம்!

Date:

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும் எனவும் இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க ஜனாதிபதி தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த குழு அறிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடும்.

அந்த அலுவலகங்களில் ஆலோசகர்கள் உட்பட பாரியளவிலான ஊழியர்கள் உயர் சம்பள மட்டங்களுக்கு அமைய உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெரிய திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...