பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளை நீக்குவதன் மூலம் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குமாறும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள், இலங்கையை கோரியுள்ளன.
LGBTIQ மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், LGBTIQ சமூகத்தின் மீதான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.
இலங்கையின் பாரம்பரிய ஜனநாயகத்தின் மையமான சங்கம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்தது.
இருப்பினும், கடந்த சில மாதங்களில் பொருளாதார வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் அங்கீகரித்தோம்.
பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகங்கள், சமூக ஆர்வலர்களைக் காவலில் வைக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது மற்றும் அதிகரித்து வரும் ஊழல்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று அமெரிக்க பிரதிநிதி கூறினார்.
பிரித்தானியாவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து வடக்கு மற்றும் கிழக்கில் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா செயற்குழுவின் 42ஆவது அமர்வின் போது, உலகளாவிய காலமுறை மீளாய்வின் 4 ஆவது சுற்றில் அவர்கள் இந்த சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்.