T20 மகளிர் உலக கிண்ணம் : இந்தியா- அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

Date:

T20 மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ‘B’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கத்திய தீவுகள் அணிகளை பதம் பார்த்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (20) அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும்.

ஏற்கனவே, 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன.

2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...