T20 மகளிர் உலக கிண்ணம் : இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

Date:

T20 மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற அஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஹர்ஷிதா 34 ரன்கள் சேர்த்தார். அவுஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 4 விக்கெட்டுகளும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா, 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இலங்கையை வென்றது.

அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த ஹீலி 54 ரன்களும், பெர்த் மூனே 56 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

அத்துடன் கிட்டத்தட்ட அரையிறுதியை எட்டியது. அவுஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதவுள்ளது.

Popular

More like this
Related

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும்...

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...