T20 மகளிர் உலக கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி!

Date:

8-வது T20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி அத்தபத்து பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அத்தபத்துக்கு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...