T20 மகளிர் உலக கிண்ணம் : அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

Date:

T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டொஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில் கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

எனினும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால், அவுஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்துடன், தொடர்ந்து 7வது முறையாக T20 மகளிர் உலக கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...