T20 மகளிர் உலக கிண்ணம் : இலங்கை அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி!

Date:

T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரில் ‘A’ பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டொஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது. இறுதியில், இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து சார்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...