T20 மகளிர் உலக கிண்ணம்: பங்காளதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது ஆவுஸ்திரேலியா!

Date:

8-வது மகளிர் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆவுஸ்திரேலியா, பங்காளதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்காளதேஷ் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பங்காளதேஷ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆவுஸ்திரேலியா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆவுஸ்திரேலிய அணி பெறும் 2-வது வெற்றி இதுவாகும்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....