T20 மகளிர் உலக கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி!

Date:

8-வது T20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி அத்தபத்து பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அத்தபத்துக்கு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...