Update:ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட பலருக்கும் கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இன்று  பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.

இந்நிலையிலேயே குறித்த பகுதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...