Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு!

Date:

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி , சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...