Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 39 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3 ஆயிரத்து 688 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கம் கிட்டத்தட்ட 2 வாரம் ஆன நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹகென் யாசினொலு என்ற 45 வயது நபர் 278 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...