அரசாங்கத்தின் வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் இடம்பெறவுள்ள பாரிய போராட்டம்!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்களின் போராட்டம் இன்று (22) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் இணைந்துகொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது தொழிற்சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் இணை செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும்  “இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள்.  இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.”என என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கும் விசேட திட்டம்

அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தானதும், சுவையானதும் ஆன...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு...

வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தது சட்டபூர்வமானதா?: ஐக்கிய நாடுகள் சபையில் தீவிர கவனம்!

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர...