இந்தோனேஷியாவின் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்: நால்வர் பலி

Date:

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று  5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தையடுத்து மக்கள் அச்சமடைந்து, வீடுகள், வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியே ஓடினர்.

வர்த்தக நிலையமொன்று சரிந்து வீழ்ந்ததால் நால்வர் உயிரிழந்தனர் என உள்ளூர் அனர்த்த தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...