புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12:30 மணியளவில் நிலநடுக்கம் போன்ற அதிர்வுகளை உணர்ந்ததாக புத்தல பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.