உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எனது முதல் முன்னுரிமையல்ல, பிள்ளைகளின் கல்விக்கே எனது முதல் முன்னுரிமையை வழங்கியுள்ளேன்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கல்விக்கு இரண்டாம் இடத்தையும், உள்ளூராட்சி தேர்தலுக்கு முதல் இடத்தையும் வழங்க வேண்டும் என்று யாராவது கூறினால் அது அவர்களின் கருத்து.
கடந்த சில ஆண்டுகளில், கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் கல்வி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் பொருளாதாரச் சிக்கலால் நமது நாட்டிற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலை வந்தது.
கடந்த காலங்களில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலைகள் உள்ளன, ஆனால் நாட்டின் கல்வி பாதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கல்விக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.