ஏப்ரல் மாத சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதிக்குள் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மக்களின் வருமான அளவைக் கருத்தில் கொள்ளும்போது, பொருட்களின் விலை அதிகமாகவே உள்ளது.
எனவே, பொருட்களின் விலையை குறைக்க முயற்சிப்போம். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என நான் நம்புகிறேன்’ என்றார்.
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
கொள்கை ரீதியில், முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ள உபகுழுக் கூட்டங்களில், மேற்கூறிய அமைச்சரவை தீர்மானம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறித்து விவாதிப்போம். எவ்வாறாயினும், மேற்கூறிய நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு இரண்டு நாட்களுக்குள் முட்டைகளை இறக்குமதி செய்யத் தொடங்குவோம்.
எவ்வாறாயினும், பல்வேறு காரணங்களைக் கூறி, முட்டை இறக்குமதிக்கு தேவையான அனுமதியை வழங்க மறுக்கும் தரப்பினர் தொடர்பில் விரிவான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.