ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெறுவதற்கு அரசு முனைப்பு!

Date:

நாட்டிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ​நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிகாட்டிகளுக்கு அமைவாகவே நாட்டின் அரச நிறுவாகம் இடம்பெறுகிறது. இதற்கு அப்பால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், நாடு இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அரசாங்கம் சர்வதேச் உடன்படிக்கைகளுக்கு மதிப்பளித்து அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல்...

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...