தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் எரான் விக்ரமரத்ன கேள்வி!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த தொழிலதிபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள், விசாரணைகளை நடத்திய நீதி மருத்துவ அதிகாரியின் நடத்தை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாதிக்கப்பட்டவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ஆரம்ப நீதி மருத்துவ அதிகாரி அறிக்கை கூறியது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக அதே நீதி மருத்துவ அதிகாரி பின்னர் தெரிவித்தார்.. இது எப்படி முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  “வெளிநாட்டு வணிகர்கள் பொதுவாக உள்ளூர் முதலீட்டாளர்களால் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உண்மையில் தங்கள் உள்ளூர் சகாக்களுடன் வேலை செய்கிறார்கள்.

எனவே, தமது உள்ளூர் சகாக்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது பற்றி இலங்கை சிந்திக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாஃப்ட்டர் குடும்பம் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த வழக்கை ஜனாதிபதி கவனிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...