துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன பிரபல கால்பந்து வீரர்!

Date:

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

31 வயதான கிறிஸ்டியன் அட்சு ஒரு கானா கால்பந்து வீரர் ஆவார், அவர் தற்போது நியூகேஸில் கால்பந்து கிளப்பில் விளையாடுகிறார்.

துருக்கி சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்க வந்த அட்சு தங்கியிருந்த கட்டிடம் நிலநடுக்கத்தால் முற்றாக இடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உதைபந்தாட்ட வீரருடன் இருந்த மேலும் இரு வீரர்கள் மற்றும் பயிற்சி திணைக்கள அதிகாரி ஒருவரின் உயிரை  காப்பாற்ற முடிந்ததாகவும், ஆனால் கிறிஸ்டியன் அட்சு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கிய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நடைபெற்ற போட்டியில், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹடேஸ்போர் அணிக்காக கிறிஸ்டியன் அட்சு வெற்றி கோலை அடித்தார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியை பாதித்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் 4,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...