துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதுடன் நிலஅதிர்வில் சேதமடைந்த கட்டிடத்தில் குறித்த நபர் இருந்திருக்கவில்லை எனவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.
அவர்களுடன் தொடர்ந்தும் இலங்கை தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.