வரிகளை இல்லாதொழித்தால் நாட்டுக்கு நூற்று அறுபத்து மூன்று பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் அதனை தற்போது செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதன்போது “நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை. சரிந்த நிலையில் இருந்து நாடு மீண்டு வரும். நாட்டுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கிறேன்.
அதன் உண்மை நிலை இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மக்களுக்கு தெரியவரும்.
நாங்கள் விருப்பத்துடன் வரி விதிக்கவில்லை. நாம் விரும்பியதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இழந்த மொத்தத் தொகை நூற்று அறுபத்து மூன்று பில்லியன் ரூபா. இந்தத் தொகையை இழக்கும் நிலையில் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.