நியூசிலாந்தை தாக்கியது சக்திவாய்ந்த புயல் : 46 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியது!

Date:

நாடு முழுவதும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கேப்ரியல் சூறாவளி ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசாங்கம் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.

இதில் அந்த நகரம் வெள்ளக்காடாக மாறியது. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் பலியாகினர். மேலும் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருள் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து ஆக்லாந்து நகரம் முழுமையாக மீளாத நிலையில் நேற்று நியூசிலாந்தின் வடக்கு பிராந்தியங்களை ‘கேப்ரியல்’ என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது.

இந்த பயங்கர புயல் அங்கு ஆக்லாந்து உள்பட 5 பிராந்தியங்களை புரட்டிப்போட்டு விட்டது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

5 பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை சீரமைப்பு பணிகளை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளதால், மின் இணைப்பை மீண்டும் கொண்டுவர பல நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே புயல், மழை காரணமாக வடக்கு பிராந்தியங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் காற்றுடன் கூடிய கனமழைக்கு மேலும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கேப்ரியல் சூறாவளி ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசாங்கம் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...