பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!

Date:

பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் சுமார் ஒரு கி.மீ அகலம் கொண்டது என்றும், 1,870 முதல் 4,265 அடிகள் வரை உயரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக 82 அடிகளுக்கும் குறைவான சிறிய விண்கற்கள் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இவை வளிமண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து சிதைந்துவிடும். ஆனால் தற்போது பூமியை நெருங்கி வரும் விண்கல், நமது பூமிக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூறமுடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இது அடுத்த வாரம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மோதலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில் 199145 (2005 YY128) விண்கல் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப்பாதையை இன்று (பெப்ரவரி 15) மற்றும் 16 ஆகிய திகதிகளுக்குள் கடந்து செல்லும் என்றும், இதனை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...