முட்டை இறக்குமதி தொடர்பில் இந்திய விநியோகஸ்தர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) பெற்றுக்கொள்ளப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலைமனு கோரல் நடைமுறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.