மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜா-எல பிரதேச சபையின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், சமாலி பெரேராவுக்குப் பதிலாக, வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதை தடுத்தமை தொடர்பில்,  நீதிமன்றம்  இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு முரணாக, தம்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க தயாராகுவதாக தெரிவித்து, மனுதாரர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை, அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை, அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...