வெளிநாட்டுப் பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வசதிகளுக்கு ஆப்பு!

Date:

ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வணிக வகுப்பில் பயணிப்பதைத் தடைசெய்து விசேட சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சுற்றறிக்கை இந்த வாரத்திலேயே வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வ அரசாங்க வெளிநாட்டு பயணங்களின் போது வணிக வகுப்பு வசதிகளை அனுபவிக்கும் உயர் அரசாங்க அதிகாரிகளாவர்.

நாட்டின் மோசமான நிதி நிலைமையினால் மக்கள் அவதியுறும் வேளையில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியமானது.

எனவே அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் கொள்கைக்கு அமைவாக அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகள் தங்கும் ஹோட்டல்களுக்கும் இந்த சுற்றறிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...