அடுத்தடுத்து பேரிடரை சந்திக்கும் துருக்கி: வெள்ள பாதிப்பால் 14 பேர் பலி!

Date:

தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு கொள்கலன் வீடுகளில் வசித்து வந்தவர்கள்  திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

இதனிடையே சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்தன. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

பூகம்பத்தால்  வீடுகளை இழந்த மக்கள் கொள்கலன்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  இதேவேளை அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில்  48,000 பேர் கொல்லப்பட்டனர் .

 

 

 

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...