அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் முறையிடலாம் !

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (டிஎம்டி) மாசு சோதனை பிரிவு, அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்திற்கு தெரிவிக்க சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) இன்று வெளியிட்டுள்ளது.

அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும், பெட்டா, பாஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்துகள் மாசு உமிழ்வு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக DMT பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், 40%க்கும் அதிகமான பேருந்துகள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்தன.

பழுதடைந்த வாகனங்களை 14 நாட்களுக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய வாகனங்களின் வருவாய் உரிமம் பறிக்கப்படும்.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளைத் தொடர்ந்து புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வேரஹெர அலுவலகத்திற்கு வராத மாசு உமிழ்வு சோதனையில் தோல்வியடைந்த வாகனங்களுக்கு முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.

பின்னர் நினைவூட்டலை மதிக்காத பட்சத்தில் இரண்டாவது நினைவூட்டல் வெளியிடப்படும். பின்னர் உரிமங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...