இந்தோனேஷியாவில் தொடர் மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!

Date:

இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேரை காணாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

இதனால் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதில் பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...