இலங்கைக்கு உதவும் வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன:சர்வதேச மன்னிப்பு சபை

Date:

கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே   மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில் இக்கடன் நெருக்கடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜி-20 நாடுகள் அமைப்பு செயற்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைந்தால் இலங்கைக்கு அவசியமான கடனையும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...