இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்திக்கு எகிப்து ஒத்துழைப்பு!

Date:

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும் கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்த எகிப்து தூதுவர், தமது நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், எகிப்து தூதுவரின் வடக்கிற்கான விஜயத்தினை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை எடுத்துரைத்ததுடன், வெளி நாடுகளின் அல்லது முதலீட்டாளர்களின் நிதியுதவி கிடைக்குமானால் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...