ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு

Date:

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில், சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குகின்றமை டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரனும் உயிரிழந்துள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ மாதிரிகளின் ஊடாக, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...