உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு !

Date:

2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலத்தாமதத்துடன் இடம்பெறுகின்றது.

இதனாலேயே பெறுபேறுகளை உரிய திகதியில் வெளியிட முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சைக்கான திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர்த்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அமைச்சரவை அங்கீகாரத்துடன் அதிகரித்துள்ள போதிலும், அதிகரிக்கப்பட்ட தொகையானது பற்றாக்குறையாக காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...