ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலை நிர்வாக பணிப்பாளர் மீது தாக்குதல்!

Date:

ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது பங்களாவில் நேற்றையதினம் (30) இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது அவர் தங்கியிருந்த கட்டான பிரதேசத்தில் உள்ள பங்களாவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது ஸ்ரீ ஜெயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஆடை தொழிற்சாலை காவலாளியும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...