கண்டி – மஹியங்கனை வீதியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Date:

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை, மண் மேடு சரிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவு பகுதிக்கு மேல் மற்றொரு இடத்தில் பெரிய பாறை சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையை மூட பொலிசார் முடிவு செய்தனர்.

இதன்படி கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தண்ணேகும்புர சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியில் பயணித்து ரஜ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக மஹியங்கனை நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ரஜமாவத்தை சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியூடாக பயணித்து தன்னேகும்புர சந்தியில் இடப்புறம் திரும்பி கண்டி நோக்கி செல்ல முடியும்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...