கபூரிய்யா கல்லூரி நிர்வாகிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு: மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டுகோள்

Date:

கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வக்ஃப் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு மஹரகம கபூரியா அரபுக்கல்லூரிக்கு உடனடியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வக்ஃப் மேன்முறையீட்டு நீதிமன்றம் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

நிர்வாகத்தினரின் பணிப்பின் பேரில் லெகோ மின்சார நிலையம் கடந்த வாரம் கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்திருந்தது.

நேற்று நடைபெற்ற வக்ப் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக கபூரியா சார்பில்  ஆஜராகும் சட்டத்தரணிகள் முறையிட்டிருந்தனர்.

கபூரியா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்து நீதிமன்றத்தின் முன் உடனடியாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏழை மாணவர்கள் கற்கும் இக் கல்லூரிக்கு நடந்திருப்பது போன்று கொழும்பு ரோயல் கல்லூரிக்கு நடந்திருந்தால் எப்படி நடந்திருக்கும் என்று நீதிமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.

நிர்வாகத்தின் பணிப்பின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் கல்லூரியின் பெயரிலிருந்த மின் இணைப்பு மாற்றப்பட்டே மின்சாரத்தை துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

பல நாட்களாக இருளில் இருந்த இம் மத்ரஸாவும் இங்குள்ள பள்ளிவாசலுக்கும் பழைய மாணவர்கள் முயற்சியால் ஜெனரேட்டர் ஒன்று பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தின் ஆளுநர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு சட்டத்தரணி கோரிக்கை இட்டார்.

இதன்படி அடுத்த அமர்வில் இந்த பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நீதிமன்றத்துக்கு ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் மஜீத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...