குவைட் நாட்டின் நிதியுதவியில் குருநாகல் அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு புதிய கட்டடம்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் தித்தவல்கஹவல ஹிரிபிடியவில் அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா  அண்மையில் பாடசாலை அதிபர் மஸாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லா B.A (நளீமி) அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டின் ISLAMIC CARE SOCIETY இன் நிதியுதவியுடன் பாத்திமா அப்துல் வஹாப் அர்ரிபாயி அவர்களின் ஞாபகார்த்தமாக இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகமது  (நளீமி) -பணிப்பாளர் ஜாமிய்யாஹ் நளீமியா விசேட அதிதிகளாக இலங்கைக்கான குவைத் தூதுவரின் விஷேட பிரதிநிதி அஷ்ஷெய்க் எம்.எம் பிர்தவ்ஸ் (நளீமி) அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூருல்லா B.A (நளீமி)
அதன் தலைவர் அல் ஹாஜ் ஆர்.எம்.அமீனுதீன்  பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பண்டார, மற்றும் அதிபர்,ஆசிரியர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...